LATEST NEWS
நயன்தாரா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு.. சமந்தா வெளியிட்ட பதிவு.. வைரல்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கு மாதங்களில் வாடகத்தை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.
தற்போது இருவரும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அடிக்கடி தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் முகத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நயன்தாரா நேற்று இன்ஸ்டாகிராம் ஒன்றை திறந்து மகன்களுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அவர் இந்த வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் ஏராளமான லைக்குகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து நயன்தாரா குழந்தைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது நடிகை சமந்தா நயன்தாரா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் போட்டு க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
