நடிகை சினேகா, சங்கீதா என பிரபலங்கள் ஒன்று திரண்ட நடிகர் விஜயகுமார் மகள் அனிதாவின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம்… Birthday கிளிக்ஸ்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சினேகா, சங்கீதா என பிரபலங்கள் ஒன்று திரண்ட நடிகர் விஜயகுமார் மகள் அனிதாவின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம்… Birthday கிளிக்ஸ்…

Published

on

தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மனைவி முத்துக்கண்ணுவின் பிள்ளையான கவிதா விஜயகுமார் ‘கூலி’ என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார்.

Advertisement

அருண் விஜய் ஹீரோவாக நடித்து  சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த  வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள். ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார்.

தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார். இவரை தவிர மற்ற நான்கு சகோதரிகளும் அவர்களுக்கு ஒரே சகோதரனான அருண் விஜயையும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பும் அரவணைப்புமாக இருப்பது பார்ப்போரை  பொறாமைப்பட வைக்கிறது. இவர்களில் விஜயகுமாரின் ஐந்து பிள்ளைகளில் நான்கு பேர் சினிமாவில் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் மட்டும் தான். எனவே அவரைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை 1997ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அனிதா எப்பொழுதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் தற்பொழுது தனது 50- வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையாயத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Tamilan Media (@tamilan_media_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in