LATEST NEWS
அமைச்சரே அந்த சோப்பு, ஷாம்பு பெயரை கொஞ்சம் சொல்லுங்க…. ஆற்றையே நுரைக்க வைக்குதுன்னா பாருங்க… சீமான் விடுத்த சவால்..!!
தமிழகத்தில் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்கி வழிவதற்கு மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புதான் காரணம் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் (ராஜீவ்) விளக்கம் அளித்துள்ளார். இது பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தற்பொழுது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
அமைச்சரின் இந்த விளக்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த ஆற்றையே மூடும் அளவிற்கு நுரை பொங்குவதற்குக் காரணமான அந்த அசாத்திய சோப்பு மற்றும் ஷாம்புவின் பெயர்களை அமைச்சர் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொழிற்சாலைகளின் விதிமீறல்களை மூடிமறைக்கவே இத்தகைய தட்டையான விளக்கங்கள் அளிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஆறுகளின் நீர் மாதிரிகளைப் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். ஆறுகளில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கலக்கும் சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் வெளியேறும் பிற இடங்களைக் கண்டறிந்து தகுந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், உண்மைத் தன்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
