மீண்டும் விஜய் கூட படம் பண்ணுவீங்களா சார்?… நச்சுனு பதில் சொன்ன இயக்குனர் அட்லீ… குஷியில் ரசிகர்கள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் விஜய் கூட படம் பண்ணுவீங்களா சார்?… நச்சுனு பதில் சொன்ன இயக்குனர் அட்லீ… குஷியில் ரசிகர்கள்..!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார். விஜய்யை வைத்து இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் சமீபத்தில் விஜயுடன் மீண்டும் இணைவீர்களா என்று அட்லியிடம் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த அவர், விரைவில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

Advertisement

தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து தெறி திரைப்படத்தை ஹிந்தியில் அட்லி ரீமேக் செய்து வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in