பரபரப்பான வழக்கில் திடீரென சிக்கிய அஜித் பட நடிகர்?.. இப்படி பண்ணிட்டாரே என புலம்பும் ரசிகர்கள்.. உண்மை என்ன..?? - Cinefeeds
Connect with us

CINEMA

பரபரப்பான வழக்கில் திடீரென சிக்கிய அஜித் பட நடிகர்?.. இப்படி பண்ணிட்டாரே என புலம்பும் ரசிகர்கள்.. உண்மை என்ன..??

Published

on

சமீபத்தில் ஹைதராபாத்தில் வெளியான போதைப்பொருள் விவகாரம் ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி நைஜீரிய இளைஞர்கள் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இவர் தற்போது தலைமுறைவாக உள்ளதாகவும் அவரை கைது செய்ய தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரின் புகைப்படத்துடன் இந்த தகவல் இணையத்தில் பரவி வரும் நிலையில் இதற்கு தற்போது நவ்தீப் விளக்கம் அளித்துள்ளார். அதாவது நான் எங்கேயும் தப்பி ஓடவில்லை, ஹைதராபாத்தில் தான் உள்ளேன். இந்த போதை பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

இந்த விவகாரத்தில் தேடப்படும் நபர் நான் இல்லை. தயவுசெய்து உண்மையான தகவலை வெளியிடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இந்த செய்தியை அறிந்த பிறகு நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இவர் தமிழில் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் நடித்த பிரபலமான நிலையில் நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும் மற்றும் இது என்ன மாயம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.