LATEST NEWS
அதர்வா படத்தின் மூலம் சினிமாவில் நுழையும் 90ஸ் சூப்பர் நடிகையின் மகள்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா..??
தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகர் முரளியின் மகன்தான் அதர்வா. இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவருக்கு பெண்கள் மத்தியில் தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பரதேசி மற்றும் ஈட்டி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது விக்னேஷ் சிவனின் அசோசியேட்டான ஆகாஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஹீரோயினியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
லைகா ப்ரோடுக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் அனிருத் இசை அமைக்க உள்ள நிலையில் இந்த படத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக படக்குழு திட்டமிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அதர்வாவின் கரியரில் இன்றுவரை அதிகபட்சத்தில் எடுக்கப்பட்ட படமாக இது இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.