பாரதிராஜா இப்படி ஒரு படத்தை இயக்கியுள்ளாரா?.. சார் நீங்க கிரேட்… இதுவரை பலரும் அறியாத தகவல்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

பாரதிராஜா இப்படி ஒரு படத்தை இயக்கியுள்ளாரா?.. சார் நீங்க கிரேட்… இதுவரை பலரும் அறியாத தகவல்..!!

Published

on

தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவிற்கு பல மண்வாசனை நிறைந்த சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். முதன்முதலில் 16 வயதிலேயே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கிய பாரதிராஜா முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜா மற்றும் நிறம் மாறாத பூக்கள் என்று கிராமத்து பானியில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது 82 வயதாகும் பாரதிராஜா பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய வாழ்நாளில் பல படங்களை இயக்கியிருக்கும் அவர் பெரிய அளவில் வெளிநாட்டிற்குச் சென்று படப்பிடிப்பு அல்லது வெளிநாட்டில் நடப்பது போன்ற கதை அம்சத்தை தேர்வு செய்தது கிடையாது. ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரியாமணி நடிப்பில் வெளியான கண்களால் கைது செய் என்ற திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படமாக வெளிநாட்டில் எடுக்கப்பட்டது.

வெளிநாட்டு கதைகளிலும் பாரதிராஜா வல்லவர் என்று இந்த திரைப்படம் நிரூபித்துக் காட்டியது. அதனைப் போலவே 2008 ஆம் ஆண்டு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்த நிலையில் வெளிநாட்டில் நடக்கும் கதை அம்சம் கொண்ட படமாக இது இருந்தது. இதுவே அவர் இயக்கத்தில் இரண்டாவது முறையாக வெளியான வெளிநாட்டு திரைப்படமாகும்.