CINEMA
கடைசி நிமிடம் வரை பாடிய மெலடி குயின்…! ஆஷா போஷ்லேவின் கடைசி ஆசை என்ன தெரியுமா….? பலரும் அறியாத ரகசியம்…!!
இந்திய இசை உலகின் ஈடு இணையற்ற பாடகி ஆஷா போஷ்லே அவர்கள் மும்பையில் மாரடைப்பால் காலமானார். தனது 90 வயதிலும் இசை மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்த அவர், “பாடிக்கொண்டே உயிரை விட வேண்டும்” என்பதே தனது வாழ்நாள் ஆசை என்று ஏற்கனவே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். வியக்கத்தக்க வகையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை அவர் இசைப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததுடன், மார்ச் 5-ஆம் தேதி நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் உற்சாகமாகப் பாடி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
சுமார் ஏழு தசாப்தங்களாக 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஆஷா, தமிழ், ஹிந்தி உட்பட பல இந்திய மொழிகளில் காலத்தால் அழியாத மெலடிகளை வழங்கியுள்ளார். இவரது மறைவு இந்தியாவிற்குப் பேரிழப்பு என்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல் மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் மூலம் “மெலடி குயின்” ஆஷா போஷ்லே இசை ரசிகர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பதே நிதர்சனம்.
