மக்களின் கவலையை புன்னகையால் மாற்றிய தலைவர்…! “தமிழகத்தில் அமைந்துள்ளது விஜய் மாடல் அரசு…” புதிய எம்.எல்.ஏக்கள் மத்தியில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நெகிழ்ச்சி உரை….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களின் கவலையை புன்னகையால் மாற்றிய தலைவர்…! “தமிழகத்தில் அமைந்துள்ளது விஜய் மாடல் அரசு…” புதிய எம்.எல்.ஏக்கள் மத்தியில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நெகிழ்ச்சி உரை….!!

Published

on

தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தற்போதைய 17-வது சட்டசபையில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு 146 புதிய முகங்களும், அதிகப்படியான இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தற்பொழுது முதலமைச்சர் விஜய் தலைமையில் ஒரு நல்லாட்சி அமைந்துளளது என்றும், இது முழுக்க முழுக்க ஒரு ‘விஜய் மாடல்’ அரசாங்கம் என்பதால் மாநிலத்தின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையில் இருந்த பொதுமக்களின் மத்தியில், தனது புன்னகையின் மூலமாகப் புதிய அரசியல் மாற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும் என நிரூபித்துக் காட்டிய ஒரு மாபெரும் மக்கள் தலைவராக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார் என்றும் புகழ்ந்துரைத்துள்ளார்.

Advertisement

இந்தியாவின் மற்ற மாநிலச் சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் பல வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்டங்களையும், தீர்மானங்களையும் இந்தத் தமிழக அவையே நிறைவேற்றித் தந்துள்ளது. அத்தகைய பெருமைமிக்கத் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றை முதலமைச்சர் விஜய் தனது விரல் நுனியில் வைத்துள்ளார் என்று குறிப்பிட்ட சபாநாயகர், புதிய உறுப்பினர்கள் அனைவரும் நூலகங்களுக்குச் சென்று இந்தச் சபை வரலாற்றைத் தீர்க்கமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அவையின் உன்னத நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிய உறுப்பினர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவதற்குத் துறை சார்ந்த வல்லுநர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in