நடிகர் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாகும் மறைந்த சூப்பர் ஸ்டார் மகன்…கோலிவுட்டில் வெடிக்கும் புதிய கூட்டணி…ராவண மகன்’ படப்பிடிப்பில் நடந்த அதிசயம்…! – cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாகும் மறைந்த சூப்பர் ஸ்டார் மகன்…கோலிவுட்டில் வெடிக்கும் புதிய கூட்டணி…ராவண மகன்’ படப்பிடிப்பில் நடந்த அதிசயம்…!

Published

on

இலங்கைத் திரையுலகை சர்வதேச அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒரே நேரத்தில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் திரைப்படம் தான் ‘ராவண மகன்’ (தமிழில்) / ‘வீரா’ (சிங்களத்தில்). மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் மாஸ்டர் கிருஷ்ணா இப்படத்தை இயக்க, குட் பிரெண்ட்ஸ் சைன் புரொடக்ஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கே. சிவா பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இலங்கை மற்றும் இந்தியத் திரையுலகக் கலைஞர்களை சர்வதேசத் தரத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியப் பாலமாக உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் படத்தொடக்க விழா அண்மையில் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது.

இப்படத்தின் மூலம் சிங்களத் திரையுலகின் மறைந்த முன்னணி நட்சத்திர நடிகரான ஜாக்சன் ஆண்டனியின் மகன் அகில தனுத்தர ஆண்டனி தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக தடம் பதிக்கிறார். அவருக்கு ஜோடியாக, தமிழின் பிரபல நடிகரும் இயக்குநருமான லிவிங்ஸ்டனின் புதல்வி ஜோவிதா பிலிப் லிவிங்ஸ்டன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக தசுன் பதிரண மிரட்டவுள்ளார். மேலும் ஜெராட் நோயல், அரவிந்தன், இம்ரான், ருத்ரா, பேர்லிஜா, உமேஷ், பிரவீன் உள்ளிட்ட இலங்கையின் பல திறமையான இளம் கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிப்பதால், இந்த புதிய காம்போ ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இப்படத்திற்கு சகிஷ்ணா சேவியர் இசையமைக்க, பிரபல பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ‘மகனுக்குத் தந்தையின் தாலாட்டு’ என்ற பின்னணிப் பாடல் படத்தின் முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது. இப்பாடலைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் ஆண்டனிதாஸ், அதன் ஆழமான வரிகளில் உருகிப் பாடும்போதே கண் கலங்கியதோடு, இது தன் இசைப்பயணத்தில் மிகப்பெரிய மைல்கல் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பாடலை சதீஷ்காந்த் எழுத, சத்ய பிரகாஷ் மற்றும் பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர். தமிழ்ச்செல்வன் சுப்பிரமணியின் திரைக்கதை-இணை இயக்கத்திலும், நளிந்த விக்ரமசேகரின் ஒளிப்பதிவிலும் உருவாகும் இத்திரைப்படம், இரு நாட்டுச் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in