CINEMA
என்னோட முதல் படத்திலேயே அப்படி ஒரு மோசமான அனுபவம், என்னால அதை ஏத்துக்கவே முடியலே, ரொம்பவும் அதுக்காக ரொம்பவும் அழுதேன் – பல ஆண்டுளுக்கு பிறகு நடிகை ரேவதி சொன்ன சீக்ரெட்!
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரேவதி கூறியதாவது, நான் நடித்த முதல் படம் மண்வாசனை. இந்த படத்தில் நடித்த போது எனக்கு ரேவதி என பெயர் வைத்தனர். அந்த பெயரை எனக்கு வைக்கும் போது ரொம்பவும் அழுதேன். ரொம்ப அழுதேன். அந்த பேர் பிடிக்கவில்லை. இது எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய அப்பா அம்மா வைத்த பெயர் ஆஷா. எதுக்கு அதை மாத்தறீங்க? என்று கோபப்பட்டேன். அதற்கு அவர்கள் இல்லே. ஏற்கனவே ஆஷா போஸ்ன்லே இருக்காங்க ஆஷா பரேல் இருக்கிறாங்க. அவங்க எல்லாம் இந்தி படங்களில் பண்ணியிருக்காங்க. அதனால் ஆஷாங்கற பேர் இங்கு எடுபடாது என்றனர்.
நான் சொன்னேன். எனக்கு வேண்டவே வேண்டாம். அதுக்கு அப்புறம் ரேவதின்னு மாத்தினதுக்கு அப்புறம் பேப்பர்ல எல்லாம் ரேவதி என்று வந்தது. எனக்கும் ரேவதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த மாதிரி எல்லாம் ஒரு அடம் பிடித்தேன். ஆனால் அதற்கு பிறகு அதை நான் ஏற்றுக்கொண்டு சகஜமாகி விட்டேன். என்னை குடும்ப வட்டாரத்தில் ஆஷா என்று அழைக்கின்றனர். சினிமா வெளியுலகத்தில் என்னை ரேவதி என்கின்றனர். அப்போது கொஞ்ச நாள் என்னை யாராவது ரேவதி என்று கூப்பிட்டால் திரும்பி பார்க்க மாட்டேன். ரேவதி யார்ன்னு போயிடுவேன். இப்போது பெயரில் என்ன இருக்கிறது என்றாகி விட்டது இப்போது என்று அந்த நேர்காணலில் நடிகை ரேவதி பேசியிருக்கிறார்.
