கமல்ஹாசன் போனில் சொன்ன அந்த விஷயம், நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், எனக்கு வேர்த்து கொட்டிப் போச்சு, நான் எவ்ளோ கெஞ்சியும் அவர் விடலே – பிரபலம் போட்டுடைத்த உண்மை! – cinefeeds
Connect with us

CINEMA

கமல்ஹாசன் போனில் சொன்ன அந்த விஷயம், நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், எனக்கு வேர்த்து கொட்டிப் போச்சு, நான் எவ்ளோ கெஞ்சியும் அவர் விடலே – பிரபலம் போட்டுடைத்த உண்மை!

Published

on

actor Kamal Haasan

நடிகர் கமல்ஹாசன் தீவிர வாசிப்பாளர். இலக்கிய ஆர்வலர். பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு ஞானசம்பந்தம் கமலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். விருமாண்டி படத்தில் அவரை நடிக்கவும் வைத்திருந்தார். அதன்பிறகு கு ஞானசம்பந்தம் பல படங்களில் நடித்து விட்டார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பட்டிமன்ற நடுவர் மற்றும் நடிகர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கூறியதாவது, ஒரு தடவை கமல்ஹாசன் எனக்கு போன் பண்ணினார்.

இன்னொரு நண்பரோட கைப்பேசி எண்ணை அவருக்கு அனுப்பச் சொன்னார். எனக்கு அப்படி அதுவரை அனுப்பி பழக்கமே இல்லை. எப்படி அனுப்புவது என்றும் தெரியாது. போன் நெம்பர் கேட்டால் பார்த்து சொல்லி விடுவதுதான் வழக்கம். அதற்கு கமலிடம் நான், போனிலேயே நெம்பர் சொல்லி விடுகிறேனே, எனக்கு அப்படி நெம்பரை அனுப்பத் தெரியாது என்று கெஞ்சினேன். அதற்கு அவர், ஞானசம்பந்தம், இன்னும் தமிழ் வாத்தியாராவே இருக்காதீங்க. இப்ப என்ன பண்றீங்க, எனக்கு நம்பரை எனக்கு நீங்களே அனுப்புறீங்க என்று சொல்லிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

Advertisement

அப்புறம் நான் வேற வழி இல்லாமல் அந்தப் புது முயற்சியில் இறங்குனேன். அவரைத் தவிர ஒரு டஜன் பேருக்கு அவர் கேட்ட நம்பரை அனுப்பிட்டேன். ஆனால் அவருக்குப் போகலை. எப்படியோ ஒரு வெற்றுச்செய்தி (எம்டி மெசேஜ்) மட்டும் அவருக்கு போயிருக்கு. உடனே இணைப்புல வந்து, ஆங். ஏதோ முயற்சி நடக்குதுன்னு தெரியுது. தொடரட்டும்ன்னு சொல்லிட்டு மறுபடியும் வெச்சிட்டார். அப்புறம் வேர்க்க விறுவிறுக்க ஒரு வழியாக அவர் கேட்ட அந்த நம்பரை அவருக்கு அனுப்பிட்டேன் என்று கமலுடன் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை உதாரணமாக காட்டி பேராசிரியர் கு ஞானசம்பந்தன் பேசியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in