CINEMA
இனி யாரும் நம்மை கண்டுக்க மாட்டாங்க, நாமே களத்தில் இறங்கிட வேண்டியதுதான், பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் அஜீத்குமார் கடைசியாக எடுத்த அதிரடி முடிவு – ஷாக் ஆன ரசிகர்கள்!
நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. அதன்பிறகு ஓராண்டு கழிந்தும் அவரது அடுத்த படம் உருவாகவில்லை. இந்த படத்தில் நடிக்க சம்பளம் ரூ. 185 கோடி என நடிகர் அஜீத்குமார் கேட்ட நிலையில் தயாரிப்பாளர்கள் பலரும் பின்வாங்கினர். அஜீத்குமார் படத்தின் வியாபாரமே ரூ. 225 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்குமார் படங்களுக்கு தியேட்டர்களில் பெரிய வசூல் இல்லை. ஓடிடி சாட்டிலைட் வியாபாரமும் பெரிய அளவில் இல்லை.
அதனால் 300 கோடி ரூபாய் பட்ஜெட் வரை படம் தயாரித்தால் பலத்த நஷ்டம்தான் ஏற்படும்.அதுமட்டுமின்றி அஜீத்குமார் நடிப்பதில் அதிக ஆர்வமின்றி எப்போதும் கார் ரேஸில்தான் அதிக ஈடுபாடு காட்டுகிறார். இந்த சூழலில் சமீபத்தில் தனது சம்பளத்தை ரூ. 185 கோடியில் இருந்து ரூ. 150 கோடியாகவும் குறைப்பதாக அறிவித்தார். ஆனால் அதிகபட்சமாக ரூ. 110 கோடி வரை சம்பளம் தரலாம். அதற்கு மேல் முடியாது என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறிவிட்டனர்.
இதனால் அஜீத்குமாரின் 64வது படம் உருவாவதில் பலத்த சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் ஏகே 64 படத்தை அஜீத்குமாரே சொந்தமாக தயாரிக்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன்தான் அந்த படத்தை இயக்குகிறார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. மிக விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இது சாத்தியம்தானா? அஜீத்குமார் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
