வித்யாசமான ஒரு சுவை, ஒருமுறை நீங்க வீட்டில் காளான் தேங்காய் பால் கிரேவி செய்து பாருங்க… ருசியில் அப்படியே அசந்து போவீங்க! – cinefeeds
Connect with us

LifeStyle

வித்யாசமான ஒரு சுவை, ஒருமுறை நீங்க வீட்டில் காளான் தேங்காய் பால் கிரேவி செய்து பாருங்க… ருசியில் அப்படியே அசந்து போவீங்க!

Published

on

Mushroom Coconut Milk Gravy

வழக்கமாக சாப்பிடும் உணவு வகைகளுக்கு மாறாக வித்தியாசமான சுவையில் தயாரான உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் ஒருமுறை காளான் தேங்காய் பால் கிரேவியை ருசித்து பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்

Advertisement

பட்டன் காளான் 1 பாக்கெட்
மல்லித்தழை
தேங்காய் பால் ஒரு கப்
சாம்பார் வெங்காயம் 1
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 1
தக்காளி 1
நெய் 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
மசாலா தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கசூரி மேத்தி தேவையான அளவு
தேங்காய் துருவல் சிறிது

செய்முறை

Advertisement

காளானை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயம் பெரிய வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் தக்காளி கருவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும். தேங்காய் துருவல் கொஞ்சம் மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும். கால் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் கால் டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து விடவும். பின்னர் தயாராக வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து நன்கு விடவும். 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைத்து அத்துடன் உப்பு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து கலந்து நன்கு கலந்து மேலும் 5 நிமிடத்திற்கு வேக விடவும்.

Advertisement

கடைசியாக கரம் மசாலாத்தூள் மல்லி இலை கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான காளான் தேங்காய் பால் கிரேவி தயார். பின்னர் எடுத்து ஒரு பவுலில் சேர்த்து பரிமாறலாம். இந்த கிரேவி சப்பாத்தி ரொட்டி பரோட்டா போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. ருசியில் அப்படியே அசந்து போவீங்க!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in