LifeStyle
“திடீர்னு உடல் எடை கூடுதா, குறையுதா…?” டிவி, மொபைல் பார்க்கும் குழந்தைகளுக்கு வரும் பேராபத்து…! பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்…. மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!
தற்போதைய அவசர கால வாழ்க்கைச் சூழலில் பெரியவர்கள் மட்டுமின்றி, சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையேயும் தைராய்டு பாதிப்புகள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள சிறிய தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக் குறைபாட்டால் ஏற்படும் இந்நோய், ஹைப்போதைராய்டிசம் மற்றும் ஹைப்பர்தைராய்டிசம் என இருவகைப்படும் என மருத்துவர் ஆஷிஷ் குப்தா விளக்குகிறார்.
ஹார்மோன் சுரப்பு குறையும் போது சோர்வு, திடீர் உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் போன்றவையும், ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் போது விரைவான எடை இழப்பு, பதற்றம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற கோளாறுகளும் ஏற்படுகின்றன. குறிப்பாகப் பெண்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் குடும்பத்தில் இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தைராய்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை, அதிக நேரம் மொபைல்/டிவி பார்ப்பது மற்றும் மன அழுத்தம் போன்ற தவறான வாழ்வியல் முறைகளே சிறுவர்களிடம் இந்த பாதிப்பு அதிகரிக்க முக்கியக் காரணங்கள் என மருத்துவர் என்.கே. சோனி தெரிவிக்கிறார். குழந்தைகளின் மந்தத்தன்மை, படிப்பில் கவனம் சிதறல், சோம்பேறித்தனம் அல்லது தொடர் களைப்பு போன்றவற்றைச் சாதாரண விஷயமாகப் பெற்றோர்கள் புறக்கணிக்கக் கூடாது;
ஏனெனில் இவை தீவிர தைராய்டின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் வாழ்நாள் மருந்து உட்கொள்ளல் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும். அயோடின் கலந்த உணவு, சமச்சீரான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி மற்றும் முறையான மருத்துவ ஆலோசனைகள் மூலம் குழந்தைகளை இந்த ஹார்மோன் குறைபாட்டுப் பாதிப்பில் இருந்து முழுமையாகப் பாதுகாக்கலாம்.
