LifeStyle
உங்களுக்கு பணக் கஷ்டம் அதிகமாக இருக்குதா? வீட்டுல எப்பவும் சண்டை சச்சரவா இருக்குதா? உப்பு டப்பாவுல இதை மட்டும் போட்டு வையுங்க – எல்லா பிரச்னையும் பறந்து போயிடும்!
நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒருவித ஆற்றல் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமையல் அறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண உப்பு ருசிக்கு மட்டுமல்ல, வீட்டு அதிர்ஷ்டத்தை மாற்றும் சக்தி கொண்டது. சில சமயம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் வீட்டில் பணம் தங்காது அல்லது நிம்மதி இருக்காது. இதுபோன்ற நேரங்களில் வாஸ்து சொல்லும் சில எளிய பரிகாரங்கள் பலன் தரும். அதில் ஒன்றுதான் உப்பு. உப்பு டப்பாவில் 5 கிராம்புகளை வைப்பது வாஸ்துபடி உப்புக்கும் சந்திரன் ராகு கேதுவுக்கம் நெருங்கிய தொடர்பு உண்டு. அதேபோல் கிராம்பு லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது.
உப்பு ஜாடியில் 5 கிராம்புகளை வைக்கும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் அதாவது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரித்து பணவரவு சீராகும். எங்காவது சிக்கியிருக்கும் பணம் திரும்ப வர வாய்ப்புகள் உருவாகும். தேவையற்ற செலவுகள் குறையும். நிதி ரீதியாக முன்னேற விரும்புவர்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். சில வீடுகளில் காரணமே இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவு டென்ஷன் இருக்கும். இது வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியின் தாக்கத்தால் ஏற்படும். உப்பு நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும் குணம் கொண்டது. கிராம்பு அமைதியின் சின்னம். உப்பு டப்பாவில் கிராம்பு வைப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை வளரும்.
வீட்டில் நிலவும் மன அழுத்தம் மற்றும் ஒரு வித பாரம் குறைந்து நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. வாஸ்துபடி உப்பை ஒருபோதும் பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் டப்பாவில் வைக்கக்கூடாது. எப்போதும் உப்பை ஒரு கண்ணாடி ஜாடியில் தான் வைக்க வேண்டும். உப்பு ஜாடியில் போட்டு வைக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 கிராம்புகளும் முழுமையாக இருக்க வேண்டும். அதன் மேலிருக்கும் மொட்டு அதாவது பூ பகுதி உடைந்து இருக்கக் கூடாது. இந்த பரிகாரத்தை செய்ய வெள்ளி அல்லது சனிக்கிழமை மிகவும் உகந்த நாள். உப்பு ஜாடியில் உள்ளே இந்த 5 கிராம்புகளையும் லேசாக அழுத்தி வையுங்கள். பிறகு அந்த ஜாடியை சமையலறையில் சுத்தமான பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
இந்த உப்பை நீங்கள் தினசரி சமையலுக்கு பயன்படுத்தலாம். ஒருவேளை கிராம்புகள் ஈரப்பதத்தால் கெட்டுப் போனால் அவற்றை எடுத்து செடியின் வேரில் போட்டு மண்ணால் மூடிவிடுங்கள். பிறகு புதிதாக 5 கிராம்புகளை உப்பு டப்பாவில் முன்பு போலவே வையுங்கள். முக்கியமாக இந்த பரிகாரத்தை செய்வது பற்றியோ நீங்கள் இதை செய்தீர்கள் என்பது பற்றியோ மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். இதை ரகசியமாக செய்தால்தான் பலன் அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதை செயல்படுத்தி பாருங்கள். பணக்கஷ்டம் நீங்கி குடும்ப உறவுகளிலும் சந்தோஷம் நிம்மதி உருவாகும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
