LATEST NEWS
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்.. அமைச்சருக்கு எதிராக சாட்டையை சுழற்றிய CM விஜய்… அதிர்ச்சியில் தவெகவினர்…!!
தமிழக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பரவும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் சி. ஜோசப் விஜய் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி அதே நாளில் இந்த வீடியோ வைரலானதால், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அரசியல் விமர்சகர்கள் அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தனது குடும்பத்தினருடன் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ள அமைச்சர் சரத்குமார், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியைக் காணச் சென்றபோது, தனது 1.5 வயது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரையைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். காடா மக்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தான் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக இந்த பழைய வீடியோ தவறான வதந்தியாகப் பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை அறிய உளவுத்துறை விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
