LATEST NEWS
போலியோ சொட்டு மருந்து குடித்த ஒன்றரை வயதுக் குழந்தை திடீர் மரணம்.. நடந்தது என்ன..? அதிர்ச்சியில் தமிழகம்..!!
தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரையைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற அந்தக் குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மருந்து கொடுத்த பின்னர், குழந்தைக்குப் புட்டிப்பால் புகட்டியதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு, சிறிது நேரத்திலேயே குழந்தை திடீரென மயக்கமடைந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த சோகமான சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
