LATEST NEWS
அடுத்த ஷாக்..! தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சரின் மகன்..? செம ஷாக்கில் ஸ்டாலின்…!!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தவெகவின் இளைஞரணியில் தனக்கு முக்கியப் பதவி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சாராய ஆலைகளை நிர்வகித்து வரும் அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு தவெகவின் உட்கட்சியினர் சிலர் அதிருப்தி மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கத் தீவிரம் காட்டி வரும் தலைமைக்கு இச்செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக இணையத்தில் இந்த செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், சந்தீப் ஆனந்த் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. அதே வேளையில், அவரை சமாதானப்படுத்த திமுக தரப்பில் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
