LATEST NEWS
“இந்தியா வேணாம்… ரூ. 4 லட்சம் சம்பளமா இருந்தாலும் வெளிநாடு தான் பெஸ்ட்..?! இளைஞரின் கருத்தால் செம கடுப்பான நெட்டிசன்கள்..!!”
மாதம் ரூ. 4 லட்சம் வரை அதிக சம்பளம் ஈட்டியபோதிலும், 26 வயதான டேனியல் என்ற இளைஞர் இந்தியாவை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புவதாகக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிநபர் நிதி ஆலோசகரான அன்சுமான் சர்மா என்பவரிடம் ஆலோசனை பெற்ற டேனியல், தான் மாதம் 3,700 அமெரிக்க டாலர் சம்பாதிப்பதாகவும், அதில் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை ஆஸ்திரேலிய நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்காகச் சேமித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு நல்ல வருமானம் இருந்தும் ஏன் இந்தியாவை விட்டுச் செல்ல விரும்புகிறீர்கள் என்று ஆலோசகர் கேட்டபோது, இந்தியாவில் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை குறைவாகவே இருப்பதாக டேனியல் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார். மேலும், சிறந்த வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான சூழல் கிடைக்கும் நாட்டிற்குச் செல்வதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நிதி ஆலோசகர், ஆஸ்திரேலிய PR விண்ணப்பச் செலவுகளுக்காக அடுத்த 7 மாதங்களுக்கு மாதம் ரூ. 1.5 லட்சம் வீதம் தொடர் வைப்புநிதியில் சேமிக்குமாறு நடைமுறை ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
https://www.instagram.com/reel/DbGbVqthjWM/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. சில பயனர்கள் டேனியலின் முடிவை ஆதரித்து, இந்தியாவில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் இளைஞர்களை இத்தகைய முடிவை நோக்கித் தள்ளுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இந்தியாவில் புதிய வாய்ப்புகள் பெருகி வரும் சூழலில், சில சவால்களை மட்டும் வைத்து நாட்டின் எதிர்காலத்தைக் குறைத்து மதிப்பிடுவது சரியல்ல என்று மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
