அய்யோ கடவுளே… என்னா ஆச்சு பாருங்க..! ‘பைனல் டெஸ்டினேஷன்’ பட பாணியில் விபத்து…! நேருக்கு நேர் வந்த மரணம்…! ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே… என்னா ஆச்சு பாருங்க..! ‘பைனல் டெஸ்டினேஷன்’ பட பாணியில் விபத்து…! நேருக்கு நேர் வந்த மரணம்…! ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

மலைப்பாதையில் பைக் ஓட்டுவது எவ்வளவு விறுவிறுப்பானது என்றாலும், அது மிகவும் அபாயகரமான ஒன்றாகும். குறுகிய பாதைகள், கூர்மையான வளைவுகள் மற்றும் கனரக வாகனங்கள் நடமாடும் இடங்களில் ஏற்படும் ஒரு சிறிய தவறும் பெரிய விபத்துக்கு வழிவகுத்துவிடும். அப்படியொரு சம்பவத்தை விவரிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலைப்பாதையில் பைக் சவாரி செய்து கொண்டிருந்த ஒருவரின் எதிரே, திடீரென ரோட் ரோலரின் பிரம்மாண்டமான இரும்புச் சக்கரம் கழன்று உருண்டு வந்த காட்சி அதில் பதிவாகியுள்ளது.

‘மஞ்சுள்’ என்ற பைக் ரைடர் பகிர்ந்த இந்த வீடியோவின் தொடக்கத்தில், சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பயணம் எந்த இடையூறும் இன்றி அமைய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால், அடுத்த சில வினாடிகளிலேயே திரைப்படங்களில் வரும் ஆக்ஷன் காட்சியைப் போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவர் குறுகிய மலைப்பாதையில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு ரோட் ரோலர் வாகனம் வந்துள்ளது. அந்த வாகனம் அருகில் வந்த நொடியில், அதன் முன்பகுதியில் இருந்த கனமான இரும்புச் சக்கரம் திடீரென தனியாகக் கழன்று, பைக் வந்த திசையை நோக்கி அதிவேகமாக உருண்டு வரத் தொடங்கியது.

Advertisement

https://www.instagram.com/reel/DbBGp0uhgbr/?utm_source=ig_web_button_share_sheet

இந்த ஆபத்தான நிலையிலும் சற்றும் பதற்றமடையாத அந்த பைக் ரைடர், உடனடி சமயோசித புத்தியுடன் செயல்பட்டு பிரேக் அடித்து பைக்கைக் கட்டுப்படுத்தினார். அவர் எதிர்வினையாற்ற ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் பெரிய விபத்து நேரிட்டிருக்கும். சரியான நேரத்தில் அவர் எடுத்த துரிதமான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு அவர் உயிர்தப்பினார். பார்ப்போரை உரையவைக்கும் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், பைக் ரைடரின் சாதுரியமான செயலையும் அதிர்ஷ்டத்தையும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in