அதிரடி உத்தரவு..! இனி SC பிரிவினருக்கு 2 நாள்… ST பிரிவினருக்கு 1 வாரம்… சாதிச் சான்றிதழ் பெற புதிய கெடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிரடி உத்தரவு..! இனி SC பிரிவினருக்கு 2 நாள்… ST பிரிவினருக்கு 1 வாரம்… சாதிச் சான்றிதழ் பெற புதிய கெடு..!!

Published

on

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் (SC) வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு 2 நாட்களுக்குள்ளும், பழங்குடியினர் (ST) வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு வாரத்திற்குள்ளும் சாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டும். அரசுத் திட்டங்களின் பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் தங்கு தடையின்றி எளிய மக்களுக்குச் சென்றடைவதை உறுதிசெய்யும் நோக்கில், எந்தவித காலதாமதமும் இன்றி விரைவாக இனச்சான்று வழங்க வேண்டும் என்று சான்றிதழ் அளிக்கும் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையில் தேவையற்ற தாமதங்களையோ அல்லது அலட்சியத்தையோ அதிகாரிகள் காட்டக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குறித்த காலக்கெடுவிற்குள் சாதிச் சான்றிதழ்களை வழங்கத் தவறினாலோ அல்லது வேண்டுமென்றே கோரிக்கைகளைத் தாமதப்படுத்தினாலோ, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற அலைய வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் விரைவாகப் பாதுகாக்கப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in