LATEST NEWS
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி…! தமிழகத்தில் மனமகிழ் மன்றங்களின் கட்டணம் அதிரடியாக இருமடங்கு உயர்வு…!!
தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்கான உரிமக் கட்டணத்தை அரசு இருமடங்காக உயர்த்தியுள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இதன்படி, சென்னையில் இதற்கு முன் ரூ .15 லட்சமாக இருந்த கட்டணம் தற்போது ரூ .30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் மாநகராட்சிகளில் ரூ .25 லட்சம் எனவும், நகராட்சிகளில் ரூ .15 லட்சம் எனவும் இந்த கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் சுமார் 1,000 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பார்களாக (FL2 / FL3 உரிமம் பெற்றவை) செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
