LATEST NEWS
BREAKING: மேயர் பிரியா, சேகர் பாபு அதிரடி கைது.. சற்றுமுன் பரபரப்பு..!!
போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் தீவிர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக அமைச்சரவையில் உள்ள சரத்குமாரை பதவியிலிருந்து நீக்கக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்னதாகப் பேசிய சேகர்பாபு, தவெக அரசுக்கு எதிராகத் தங்களது போராட்டம் இத்துடன் முடிந்துவிடாது என்றும், இது ஆரம்பம் மட்டுமே என்றும் எச்சரித்தார். மேலும், தவெக அரசுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதால், பல இடங்களில் திமுகவினர் கைது செய்யப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
