LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் அவலம்…! கதவை திறக்காத ஊழியர்கள்… மருத்துவமனைக்கு வெளியே வலியால் அலறிய கர்ப்பிணி பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் சரியான நேரத்தில் கதவைத் திறக்கத் தவறியதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடுமையான பிரசவ வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், அங்குள்ள பிரதான கதவு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கதவைத் திறக்குமாறு அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குடும்பத்தினர் கெஞ்சிய போதிலும், ஊழியர்களின் அலட்சியத்தால் அவர்கள் நீண்ட நேரம் கதவை திறக்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் வலியால் துடிதுடித்தபடி மருத்துவமனைக்கு வெளியேயே காத்திருக்க நேரிட்டது.
#WATCH | Woman In Labour Forced To Wait For 30 Minutes Outside Hospital Late At Night In MP's Sheopur As Staff Fail To Open Gate; Video Goes Viral #MPNews #MadhyaPradesh #healthcare pic.twitter.com/5Y84o1xexW
— Free Press Madhya Pradesh (@FreePressMP) June 28, 2026
இந்த மனிதாபிமானமற்ற மருத்துவ அலட்சியம் குறித்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்றத்தனம் குறித்து பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
