ஆட்சியை கவிழ்க்க சதி.. “ஸ்டாலின் அரசியலை விட்டே விலகணும்” இவ்வளவு கேவலமா நடந்துக்கிறாரு… கொந்தளித்த அமைச்சர் நிர்மல் குமார்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆட்சியை கவிழ்க்க சதி.. “ஸ்டாலின் அரசியலை விட்டே விலகணும்” இவ்வளவு கேவலமா நடந்துக்கிறாரு… கொந்தளித்த அமைச்சர் நிர்மல் குமார்…!!

Published

on

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அரசியலை விட்டு விலக வேண்டும் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய ஒருவருக்கு அரசியல் செய்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று அவர் தனது பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் தற்போது இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி வேலைகளில் திமுக கடந்த 40 நாட்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை திமுகவினர் ரகசியமாகத் தொடர்புகொண்டு, கட்சி மாறுவதற்காக சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசி வருவதாக அவர் ஒரு அதிரடிப் புகாரை முன்வைத்துள்ளார்.

Advertisement

இதன் காரணமாகவே, ஒவ்வொரு பொது மேடையிலும் “தவெக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்” என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார் என்று நிர்மல்குமார் விளக்கியுள்ளார். இதுபோன்ற கேவலமான மற்றும் ஜனநாயகத்திற்குப் புறம்பான குதிரைப் பேரச் செயல்களை திமுக தலைவரும் அதன் நிர்வாகிகளும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in