LATEST NEWS
BREAKING: தவெக MLA-க்கள் குதிரை பேர விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு… உண்மையை அம்பலப்படுத்திய காவல்துறை..!!
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள் 10 முதல் 12 பேரிடம் கட்சி மாறுவதற்காகத் தி.மு.க ஆதரவாளர்கள் பேரம் பேசிய அதிர்ச்சித் தகவல் சென்னை காவல்துறையின் விசாரணையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக, சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக, தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ஐபிடிஎஸ் கருத்துக்கணிப்பு அமைப்பைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் ரூ. 35 கோடி பேரம் பேசியுள்ளார். இதற்குத் தவெக எம்.எல்.ஏ இளையராஜா உடன்பட மறுத்து கண்டிப்புடன் பேசியதால், இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படும் எனத் திருநாவுக்கரசு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த குதிரை பேர விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களின் முழுமையான அறிவுரையின் பேரில் தான் திருநாவுக்கரசு, தவெக எம்.எல்.ஏ இளையராஜாவைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களைச் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதால், தற்போது தலைமறைவாக இருக்கும் அசோக்குமாரைப் பிடிக்கக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்
