எம்பி மஹுவா மீது தாக்குதல்…! என் மீது முட்டை வீச்சு… போலீஸ்சார் வேடிக்கை வேடிக்கை…! கொதிக்கும் மஹுவா மொய்த்ரா…! பாஜாக குண்டர்கள் செய்த அட்டூலியம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எம்பி மஹுவா மீது தாக்குதல்…! என் மீது முட்டை வீச்சு… போலீஸ்சார் வேடிக்கை வேடிக்கை…! கொதிக்கும் மஹுவா மொய்த்ரா…! பாஜாக குண்டர்கள் செய்த அட்டூலியம்..!!!

Published

on

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள பலாஷி பகுதியில் உள்ள அக்கட்சியின் எம்.எல்.ஏ அலிஃபா அகமதுவின் இல்லத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா அங்கு சென்றிருந்தார். அப்போது திடீரென அங்கு கூடிய ஒரு கும்பல், அவருக்கு எதிராக “திரும்பிப் போ” என்றும் “திருடன்” என்றும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், அவர் இருந்த கட்டடத்தின் ஜன்னல்களை நோக்கி முட்டைகளையும், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் வீசி தீவிரமாகத் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை மஹுவா மொய்த்ரா தனது சமூக ஊடகப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து வெளியிட்டார். அதில், ஜன்னல் வழியாக முட்டைகள் தொடர்ந்து வீசப்படுவதை காட்டிய அவர், “இங்கு கூடியிருப்பவர்கள் சாதாரண பொதுமக்கள் அல்ல, அவர்கள் பா.ஜ.க-வைச் சேர்ந்த குண்டர்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், திட்டமிட்டே தன் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருந்த போது, அங்கு வந்த மேற்கு வங்காள காவல்துறையினரும், மத்தியப் பாதுகாப்புப் படையினரும் கும்பலைக் கலைக்க எந்தவொரு தீவிர முயற்சியும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக மஹுவா மொய்த்ரா சாடினார். இதுகுறித்து மாநில டி.ஜி.பி-க்குத் தகவல் தெரிவித்தும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தான் காரில் ஏறும் போது முட்டை மற்றும் கற்களை வீச வேண்டும் என்பதற்காகவே கும்பலைக் கலைக்காமல் போலீசார் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் தனது பதிவில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in