LATEST NEWS
FLASH: திடீர் உடல்நலக்குறைவு… லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகாத எ.வ.வேலு.. வழக்கறிஞர் மூலம் அவகாசம் கேட்டு திடீர் கடிதம்..!!
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எ.வ.வேலு, சாலை மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும், எ.வ.வேலு ஆஜராவதற்கு வரும் திங்கட்கிழமை அல்லது வேறு ஒரு தேதியில் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
