LATEST NEWS
விலகும் நிர்வாகிகள்…! வேலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டையில் தீவிர கவனம்… இபிஎஸ்-இன் அடுத்தகட்ட நகர்வு..!!!
அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து ‘தவெக’ கட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர் கட்சித் தாவல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவசர மற்றும் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை இன்று தொடங்கியுள்ளார்.
முதற்கட்டமாக வேலூர், செங்கல்பட்டு மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் அவர் இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் இருந்து மரகதம் குமரவேல், C.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரிசெய்து, கட்சியின் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்காக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியேறியுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்த அதிரடி ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
