LATEST NEWS
பதவி போனதுமே அடுத்த ஷாக்!.. சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிரடி நீக்கம்.. இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு..!!
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் காரணமாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்கள் 11 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரத்தில் சி.வி. சண்முகத்தின் வசம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி அண்மையில் பசுபதிக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக, புதிய மாவட்ட செயலாளர் பசுபதிக்கும், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்த உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சி.வி. சண்முகத்தின் முக்கிய ஆதரவாளர்களான ஆனந்தி, வெங்கடேஷன், எழில்ராஜ், விஜயன் உள்ளிட்ட 11 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழ்நிலையில், விழுப்புரம் அதிமுகவில் சி.வி. சண்முகத்தின் பிடி தளர்த்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த அதிரடி ஆக்ஷன் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
