ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்!… இனி தட்கல் டிக்கெட் 10 செகண்டில் ரெடி… IRCTC கொண்டு வந்த அதிரடி மாற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்!… இனி தட்கல் டிக்கெட் 10 செகண்டில் ரெடி… IRCTC கொண்டு வந்த அதிரடி மாற்றம்..!!

Published

on

ரயில் டிக்கெட் முன்பதிவை இன்னும் வேகமாக்க IRCTC இணையதளம் 24 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 82 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் இந்தச் சூழலில், தட்கல் நேரத்தில் ஏற்படும் சர்வர் பிஸியாகும் பிரச்சினை மற்றும் கேப்ட்சா குளறுபடிகளுக்குத் தீர்வாக இந்த புதிய வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பீட்டா பதிப்பில் தேவையற்ற பாதுகாப்பு குறியீடுகள் மற்றும் கவனச்சிதறலை ஏற்படுத்தும் விளம்பரச் சாளரங்கள் நீக்கப்பட்டு, எளிமையான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகுப்புகளின் இருக்கை விபரங்களையும் ஒரே பார்வையில் அறியும் வசதி, விரைவான கட்டணச் செலுத்தும் முறை மற்றும் பயணிகளின் விவரங்களைச் சேமித்து வைக்கும் வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் முன்பதிவு படிகள் கணிசமாகக் குறைந்துள்ளன. தற்போதைய இணையதள முகப்புப் பக்கத்தில் உள்ள இணைப்பு மூலம் இந்த பீட்டா பதிப்பைப் பயன்படுத்திவிட்டு, தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in