சென்னையில் அதிர்ச்சி..! வயது மரக்கடை அதிபரை நைசாக வரவழைத்து… ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிய கல்லூரி மாணவி… கத்திமுனையில் மிரட்டிய கணவன்… அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

சென்னையில் அதிர்ச்சி..! வயது மரக்கடை அதிபரை நைசாக வரவழைத்து… ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிய கல்லூரி மாணவி… கத்திமுனையில் மிரட்டிய கணவன்… அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற மரக்கடை அதிபரிடம், பத்மா (47) என்ற பெண் நீண்ட நாட்களாக நட்பாகப் பழகி, அடிக்கடி பண உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கோவிந்தசாமியிடம் அதிகப் பணம் இருப்பதை அறிந்த பத்மா, அவரிடமிருந்து பெரிய தொகையைப் பறிக்கத் தனது தோழியுடன் சேர்ந்து ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

திட்டமிட்டபடி நேற்று முன்தினம் மதியம் தன்னிடம் மரம் இருப்பதாகக் கூறி, கோவிந்தசாமியைக் கொடுங்கையூரில் உள்ள தனது தோழி எஸ்தர் நான்சி (30) என்பவரது வீட்டிற்குப் பத்மா அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் எஸ்தர் நான்சி கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார். உடனே பத்மா முதியவரைத் திட்டி, அவரது ஆடைகளைக் கட்டாயப்படுத்தி கழற்றியுள்ளார். அப்போது அங்கிருந்த எஸ்தர் நான்சியும், அவரது கணவர் முன்னா கருப்பையாவும் (33) தங்களது கைபேசி மூலம் முதியவரை நிர்வாண வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர், இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கோவிந்தசாமியைக் கத்திமுனையில் மிரட்டியுள்ளனர்.

Advertisement

பணத்தைத் தயார் செய்து தருவதாகக் கூறி அங்கிருந்து தப்பி வந்த கோவிந்தசாமி, உடனடியாகக் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி பத்மா, கல்லூரி மாணவியான எஸ்தர் நான்சி மற்றும் அவரது கணவர் முன்னா கருப்பையா ஆகிய மூன்று பேரையும் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டப்படியான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in