LATEST NEWS
“10 நொடியில் 20 அறைகள்” புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோவால் போலீஸ் அதிரடி!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளிக்கக் காவல் நிலையம் நோக்கிச் சென்ற பூஜா என்ற திருமணமான பெண், வழியில் மறித்துக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை அவரது மைத்துனர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து வெறும் 10 நொடிகளில் 20 முறை கன்னத்தில் அறைந்து சித்திரவதை செய்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற பூஜாவின் கணவர் மற்றும் அவர்களின் 3 வயது பெண் குழந்தையும் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
https://twitter.com/TrueStoryUP/status/2072326168465056256/video/1
அக்கம் பக்கத்தில் வசிக்கும் சந்தீப் சச்சான் என்பவர் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து புகார் அளிக்க அவர் தன் கணவருடன் பைக்கில் சென்றபோது, மைத்துனர் மற்றும் சந்தீப் உள்ளிட்ட கும்பல் அவர்களை வழிமறித்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
