நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. ஒரே நாளில் ரூ.1,200 உயர்ந்த தங்கம் விலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. ஒரே நாளில் ரூ.1,200 உயர்ந்த தங்கம் விலை..!!

Published

on

தமிழகத்தில் தங்கம் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,200 உயர்ந்து பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,000க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வின் காரணமாக அது ரூ.1,07,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து, ரூ.13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,50,000 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in