LATEST NEWS
சீட்டும் இல்லை… வரவேற்பும் இல்லை.. அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையாவின் ‘பம்பர் ப்ளான்’ தவிடுபொடி… திட்டமெல்லாம் வீணா போச்சே… ஷாக் கொடுத்த முதல்வர் விஜய்..!!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான இவர், தவெகவில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் எதிர்காலத்தைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கில் இந்த அதிரடி முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.
தவெகவில் இணைந்ததன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் சீட் பெற்று வெற்றி பெற்றால், அக்கட்சியின் ஆட்சியில் அமைச்சராகலாம் அல்லது பெரிய அளவிலான அரசு டெண்டர்களை எடுக்கலாம் என இசக்கி சுப்பையா ரகசியத் திட்டம் போட்டதாகத் தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் அவர் கட்சி மாறியிருந்தாலும், தற்போதைய சூழல் அவருக்குச் சாதகமாக இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சியான தவெகவின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் இசக்கி சுப்பையாவிற்குப் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றும், இதனால் அவருக்கு மீண்டும் போட்டியிட சீட் கிடைப்பது மிகவும் கடினம் என்றும் தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சித் தலைமையின் இந்த சுணக்கமான போக்கால், அவரது அமைச்சர் கனவு மற்றும் டெண்டர் திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளதால் இசக்கி சுப்பையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்பொழுது கடும் அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளனர்.
