தமிழக அரசியலில் பூகம்பம்..! தவெக MLA-வுக்கு ரூ.35 கோடி.. திமுக MLA-வுக்கு ரூ.50 கோடி.. பகீர் கிளப்பும் குதிரை பேர புகார்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழக அரசியலில் பூகம்பம்..! தவெக MLA-வுக்கு ரூ.35 கோடி.. திமுக MLA-வுக்கு ரூ.50 கோடி.. பகீர் கிளப்பும் குதிரை பேர புகார்கள்..!!

Published

on

தமிழக அரசியல் களத்தில் குதிரை பேர புகார்கள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கோடி கணக்கில் பேரம் பேசப்பட்டதாகப் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பதவியைக் காலி செய்ய வைப்பதற்காகத் தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் போட்டியாக, திமுக சட்டமன்ற உறுப்பினரைத் தங்கள் பக்கம் இழுக்கத் தவெக தரப்பில் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த இருதரப்புப் புகார்களின் உண்மைத்தன்மை இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், தற்போதைய மைனாரிட்டி அரசு அமைந்ததே இத்தகைய குதிரை பேரக் கலாச்சாரத்திற்குப் பிறப்பிடம் என்று அரசியல் நோக்கர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைக்கவும், ஆட்சியைத் தக்கவைக்கவும் கோடிக்கணக்கில் பணம் விளையாடுவதாக எழுந்துள்ள இந்த விவகாரம் தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in