அடக்கடவுளே இப்படி சொல்லிப்புட்டாரே..! அதிமுக அழியாமல் மீள இதுதான் தீர்வு.. பெரிய குண்டை தூக்கிப்போட்ட கே.சி.பழனிசாமி… அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன EPS..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே இப்படி சொல்லிப்புட்டாரே..! அதிமுக அழியாமல் மீள இதுதான் தீர்வு.. பெரிய குண்டை தூக்கிப்போட்ட கே.சி.பழனிசாமி… அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன EPS..!!

Published

on

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி கணிக்கத் தவறியது தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அல்ல, மாறாக அதிமுக தொண்டர்களின் உண்மையான மனநிலையைத்தான் என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை இன்னொரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆராகவோ அல்லது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவாகவோ அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டு செயல்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட இயக்கமும், ஜெயலலிதா வளர்த்தெடுத்த இயக்கமும் மீண்டும் வலுப்பெற வேண்டுமானால், அதிமுகவில் தலைமை மாற்றம் ஏற்படுவது ஒன்றுதான் ஒரே தீர்வு என்றும் கே.சி.பழனிசாமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in