நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…! மனைவியை அழைக்க வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… தடுக்க வந்த பெண்ணும் பலி..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…! மனைவியை அழைக்க வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்… தடுக்க வந்த பெண்ணும் பலி..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கும், சந்தீப் கவுர் என்பவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குடும்பக் தகராறு காரணமாக, சந்தீப் கவுர் தர்ன்தாரனில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று லவ்பிரீத் சிங் தனது மனைவியைச் சமாதானப்படுத்தி, மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகத் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்குச் சென்ற லவ்பிரீத் சிங்கிற்கும், அவரது மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லவ்பிரீத்தின் மைத்துனரான சாஜன் சிங், வீட்டிலிருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து லவ்பிரீத் மீது ஊற்றியுள்ளார். அப்போது அங்கிருந்த சாஜன் சிங்கின் அண்ணி குர்ஜீத் கவுர் என்பவர் சண்டையைத் தடுக்க முயன்றபோது, அவர் மீதும் பெட்ரோல் சிதறியுள்ளது. ஆனால், கோபத்தில் இருந்த சாஜன் சிங் லைட்டரால் லவ்பிரீத் மீது தீ வைத்ததில், லவ்பிரீத் மற்றும் குர்ஜீத் கவுர் ஆகிய இருவரும் உடல் கருகினர்.

Advertisement

இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி லவ்பிரீத் சிங் மற்றும் குர்ஜீத் கவுர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தர்ன்தாரன் காவல்துறையினர், முக்கியக் குற்றவாளியான சாஜன் சிங்கை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். ஜூன் 13 அன்று நடந்த இக்கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in