LATEST NEWS
ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி…!சர்ச்சையில் தமிழக அரசு..!!
வழக்கு ஒன்றில் ஆடு திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு, அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் காரணமாகத் தமிழக அரசு தற்போது கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்த ஆண்டு வாணியம்பாடியில் காரில் சென்று ஆடுகளைத் திருடியதாக, ஷேக் சுல்தான் என்ற வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆடு திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்த வழக்கறிஞரே தற்போது சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.
ஆடு திருட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளான அதே வழக்கறிஞர் ஷேக் சுல்தான், தற்போது திருப்பத்தூர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் மாவட்ட முதன்மை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை அரசுப் பதவியில் நியமித்தது பொதுமக்களிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
