இப்போ வந்தவங்களுக்கு பதவி… செங்கோட்டையனுக்கும் அமைச்சர் பதவி கொடுத்துட்டாங்க.. அப்போ நமக்கு கிடையாதா..? செம அதிருப்தியில் தவெக நிர்வாகிகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்போ வந்தவங்களுக்கு பதவி… செங்கோட்டையனுக்கும் அமைச்சர் பதவி கொடுத்துட்டாங்க.. அப்போ நமக்கு கிடையாதா..? செம அதிருப்தியில் தவெக நிர்வாகிகள்..!

Published

on

அதிமுகவினர் அதிகளவில் தவெக-வில் இணைந்து வருவதால், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பகால நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். “புதிய அரசியல்” என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த தவெகவை, தற்போது உள்ளே நுழைந்துள்ள அதிமுகவினர் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதிதாக இணைந்துள்ள இரண்டு விஜயபாஸ்கர்களும் தங்களுக்கு முக்கியப் பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதன் காரணமாக, தவெக கட்சிக்காகவும் அதன் வெற்றிக்காகவும் ஆரம்பத்திலிருந்தே அடிமட்டத்திலிருந்து உழைத்த உண்மையான நிர்வாகிகளுக்குக் கிடைக்க வேண்டிய முக்கியப் பொறுப்புகளையும் பதவிகளையும், அதிமுகவிலிருந்து வந்தவர்களே பறிக்கத் தொடங்கிவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தவெக அரசு மற்றும் கட்சிக்குள்ளே நிலவி வரும் இந்த உள்கட்சிப் பூசலையும், பழைய-புதிய நிர்வாகிகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in