FLASH:காங்கோவில் படகு கவிழ்ந்து 20 பள்ளி மாணவர்கள் பலி..! 80 பேர் மீட்பு.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH:காங்கோவில் படகு கவிழ்ந்து 20 பள்ளி மாணவர்கள் பலி..! 80 பேர் மீட்பு.!!

Published

on

காங்கோ நாட்டில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான படகு விபத்தில், தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய பள்ளி மாணவர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோகமான கோர விபத்தானது கசாய் மாகாணத்தில் உள்ள சங்குரு மற்றும் கசாய் ஆறுகள் ஒன்றுடன் ஒன்று சங்கமிக்கும் இடத்தில் நிகழ்ந்துள்ளது. தேர்வு எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது ஒட்டுமொத்த நாட்டையுமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்துக்குள்ளான அந்தப் படகில் மொத்தம் 200 பேர் வரை பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்ததைத் தொடர்ந்து தீவிர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in