LATEST NEWS
மானம் கெட்டவங்க… இறுதிச்சடங்குக்கு வந்தவர்களை ஒரே குண்டில் ஒட்டுமொத்தமாக காலி செய்ய முடியும்… அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சால் உலக அரங்கில் வெடித்த மோதல்..!!
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தை மையமாக வைத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஈரான் தரப்புக்கு இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. காமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள ஈரான் தலைவர்கள் அனைவரையும் அமெரிக்காவால் ஒரே குண்டில் ஒட்டுமொத்தமாக அழித்துவிட முடியும் என்று டிரம்ப் அண்மையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருந்தார். ஈரானியர்கள் காமேனிக்காக அழுவது போலி கண்ணீராக இருக்கலாம் என்று குறிப்பிட்ட டிரம்ப், தலைவர்களை ஒட்டுமொத்தமாகக் காலி செய்யக்கூடிய சக்தி இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த ஆட்கள் தேவை என்பதால் அதைச் செய்யப்போவதில்லை என்று கிண்டலாகப் பேசியிருந்தார்.
டிரம்பின் இந்தப் பேச்சுக்கு, ஆர்மீனியாவிலுள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் கடும் பதிலடி கொடுத்துள்ளது. காமேனியைத் தாக்கியதை “நறுமணப் பாட்டிலை உடைப்பதற்கு” ஒப்பிட்டு, அதனால் அதன் வாசம் உலகெங்கும் பரவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், மனிதர்களைக் கொல்ல முடிந்தாலும் கொள்கைகளைக் கொல்ல முடியாது என்றும், சொந்த வரலாறோ, நாகரிகமோ இல்லாத அமெரிக்காவால் தங்களின் துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் சாடியுள்ளது.
பிப்ரவரி இறுதியில் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட காமேனியின் உடல் தெஹ்ரானில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மஷாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது. புனித நகரங்கள் வழியாக ஒரு வார காலம் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிச்சடங்கு நிகழ்வுகளின் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
