“இது ராகுல் காந்திக்கு செய்யும் துரோகம் இல்லையா?” தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமரா..? ஆதவ் அர்ஜுனா பேச்சும்… விஜய் ரசித்த தருணமும்… அப்பாவு எழுப்பிய பகிரங்கக் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது ராகுல் காந்திக்கு செய்யும் துரோகம் இல்லையா?” தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமரா..? ஆதவ் அர்ஜுனா பேச்சும்… விஜய் ரசித்த தருணமும்… அப்பாவு எழுப்பிய பகிரங்கக் கேள்வி..!!

Published

on

சட்டமன்ற நிகழ்வுகளை உற்றுநோக்கியபோது மறைந்த தலைவர் கலைஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்த அப்பாவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகச் சிறப்பாகச் சிந்தித்துச் செயல்பட்டுத் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டார். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திய பெருமை அவரையே சாரும் என்றும் பாராட்டியுள்ளார்.

தொடர்ந்து தற்போதைய அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், காவிரி, மேகதாது, நீட், தொகுதி மறுவரையறை மற்றும் FCRA தொடர்பான தீர்மானங்களை அப்படியே டப்பிங் செய்து, தாம் சிந்தித்துச் செயல்படுத்தியது போல காட்டி ஆட்சி நடத்துவதாகக் குற்றம்சாட்டினார். இந்தச் செயல்பாடுகளைப் பார்த்துத் தமிழ்நாடே சிரிப்பதாகச் சாடினார்.

Advertisement

அதேபோல், இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ‘சட்டமன்றக் கதாநாயகனாகவே’ வலம் வந்ததாகக் கூறிய அப்பாவு, அவரை மக்கள் ‘சின்ன கலைஞர்’ எனப் பாராட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தொகுதி மறுவரையறை தீர்மானத்தின் போது ‘அடுத்த பிரதமர் தமிழ்நாட்டிலிருந்து வருவார்’ என ஆதவ் அர்ஜுனா பேசியதை விஜய் ரசித்ததையும், அதற்குத் தவெக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்ததையும் சுட்டிக்காட்டிய அவர், இது காங்கிரஸிற்கும் ராகுல் காந்திக்கும் செய்யும் துரோகம் இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in