அலி கமேனிக்கு ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்… ஒரே ஷாட்டில் தூக்கிருவேன்… மீண்டும் ஈரானை சீண்டும் டிரம்ப்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அலி கமேனிக்கு ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்… ஒரே ஷாட்டில் தூக்கிருவேன்… மீண்டும் ஈரானை சீண்டும் டிரம்ப்..!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் கலந்துகொண்டு அழுவது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனமான அசியோஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஈரானிய மக்கள் அனைவரும் அலி கமேனியை வெறுப்பதாகத் தான் நினைத்ததாகவும், ஆனால் இறுதிச்சடங்கில் அவர்கள் அழுவதைப் பார்த்து வியப்படைந்ததாகவும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், மக்களின் இந்த அழுகை உண்மையானது அல்ல என்றும், அவை “போலி கண்ணீராக” இருக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதனுடன் ஈரானியத் தலைவர்களை எச்சரிக்கும் விதமாகவும் அவர் பேசியுள்ளார். ஈரானின் எஞ்சிய முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இறுதிச்சடங்கிற்காகக் கூடியுள்ளதால், ஒரே ஷாட்டில் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட முடியும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தற்போது போர் நிறுத்தப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாலும், அவர்களைக் கொன்றுவிட்டால் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த ஆள் இருக்க மாட்டார்கள் என்பதாலும் அமெரிக்கா அதைச் செய்யவில்லை என்றும் அதிபர் டிரம்ப் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு ஈரான் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in