3 ஆண்டு கால திருமணம்..! ஒரு குழந்தை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் மூச்சை அடக்கிய கொடூர மனைவி..!! – cinefeeds
Connect with us

CRIME

3 ஆண்டு கால திருமணம்..! ஒரு குழந்தை… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் மூச்சை அடக்கிய கொடூர மனைவி..!!

Published

on

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மோனு. இவருக்கும் தன்னு என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மோனு வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் 8-ஆம் தேதி மாலை, மருந்து வாங்கி வருவதாக ஸ்கூட்டரில் வெளியே சென்ற மோனு அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஜூன் 10-ஆம் தேதி அசல்வாஸ் கிராமத்தில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து மோனுவின் சடலத்தை மீட்டனர். அவரது ஸ்கூட்டர் கரையில் நிறுத்தப்பட்டிருந்ததாலும், உடலில் காயங்கள் இல்லாததாலும் இது விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது.

மோனுவின் இறுதிச் சடங்குகள் நடந்தபோது, அவரது மனைவி தன்னுவின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குடும்பத்தினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. இது குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்படவே, அவர்கள் தன்னுவின் கைபேசி அழைப்புகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், மோனு காணாமல் போன அன்று இரவில், தன்னு ‘சோனு’ என்ற வாலிபருடன் பலமுறை தொடர்ந்து பேசியிருப்பது அம்பலமானது. சந்தேகத்தின் பேரில் தன்னுவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவருக்கும் சோனுவிற்கும் இடையே திருமணத்தைத் தாண்டிய கள்ளத்தொடர்பு இருந்ததும், அதற்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட அவர் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

Advertisement

திட்டத்தின்படி, சம்பவத்தன்று இரவு மோனுவை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தன்னு வரவழைத்துள்ளார். அங்கு ஏற்கனவே தன்னுவின் கள்ளக்காதலன் சோனு மற்றும் அவனது கூட்டாளிகளான ஹரியோம், அமன் ஆகியோர் தயாராகக் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து மோனுவின் வாய் மற்றும் மூக்கைப் பலமாக அழுத்தி மயக்கமடையச் செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு விபத்து போல நாடகமாடியுள்ளனர். தற்போது இந்த வழக்கில் மோனுவின் மனைவி தன்னு மற்றும் கொலையில் உதவிய ஹரியோம் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முக்கியக் குற்றவாளி சோனு உள்ளிட்ட மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in