LATEST NEWS
தவெக ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் ரகசியச் சதி..? திமுக சீனியர்களின் எச்சரிக்கையை மீறி காய் நகர்த்தும் ‘இளம்படை’… தமிழக அரசியலில் அடுத்தடுத்து வெடிக்கும் அதிரடி திருப்பங்கள்..!!
தமிழக அரசியலில் தவெக ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடப்பதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருவேளை அப்படி நடந்தால், அது அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரும் அனுதாப அலையை உருவாக்கி, அரசியல் ரீதியாக அவருக்கே சாதகமாக முடியும் என அரசியல் விமர்சகர்கள் கணிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
திரைக்குப் பின்னால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் தீவிரமாக நடப்பதாகக் கூறப்படும் வேளையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ கட்சிகளுக்கிடையேயான ரகசியக் கூட்டணி மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற விபரீத திட்டங்களை திமுகவின் மூத்த நிர்வாகிகள் (சீனியர்கள்) கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், இது கட்சியின் நீண்டகால பாரம்பரியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஆனால், மூத்தவர்களின் இந்த எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டு, தற்போதைய திமுகவின் அதிகாரமிக்க இளம்படையே இந்த ஆக்ரோஷமான மற்றும் ஆபத்தான அரசியல் சதித்திட்டங்களுக்குப் பின்னால் இருந்து காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் பரவலாகப் பேசி வருகின்றன.
