LATEST NEWS
கட்டிலுக்கு அடியில் சென்று அழுதுகொண்டிருந்தவரு தானே நீங்க..? செந்தில் பாலாஜியை வச்சு செஞ்ச அமைச்சர் ராஜ்மோகன்…!!
அமலாக்கத்துறை விசாரணையின் போது கட்டிலுக்கு அடியில் சென்று அழுதுகொண்டிருந்த செந்தில் பாலாஜிக்கு தற்போதைய முதலமைச்சர் விஜய்யை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையாகச் சாடியுள்ளார். கரூரில் மக்களை முதலமைச்சர் விஜய் சந்தித்ததை எதிர்கொள்ள முடியாமல் திமுகவினர் தேவையில்லாமல் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், ‘கரூர் கம்பெனி ஓனர் ஓடி ஒளிந்ததாக’ செந்தில் பாலாஜி பேசியதற்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், கரூரில் துயரம் நிகழ்ந்த வெறும் 5-வது நிமிடத்திலேயே செந்தில் பாலாஜி எப்படி நேரலை கேமராக்களுடன் மருத்துவமனைக்கு வர முடிந்தது என்று அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே தெரியாத விஷயம் செந்தில் பாலாஜிக்கு உடனடியாகத் தெரிந்தது எப்படி என்றும், விபத்து நடந்தவுடன் அங்கு வந்து அவர் ஒரு பெரிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகவும் அமைச்சர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
