LATEST NEWS
BREAKING: “மாநிலப் பாடலே முதலில் பாட வேண்டும்” உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்..!!
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, இனிவரும் அனைத்து அரசு விழாக்களிலும் மாநிலப் பாடலே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, எந்தவொரு அரசு நிகழ்ச்சி தொடங்கப்படும் போதும் அந்தந்த மாநிலத்தின் மாநிலப் பாடல் (உதாரணமாகத் தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து) முதலில் ஒலிக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என்றும், இறுதியாகத் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடும்போது கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான விதிகளையும் மத்திய அரசு இந்த உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது. இவை இரண்டையும் பாடும்போது அவற்றின் அசல் வரிகள் எவ்வித மாற்றமும் இன்றி, துல்லியமான மற்றும் சரியான உச்சரிப்பு முறைகளுடன் மட்டுமே பாடப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த பொது விழாக்களிலும் உடனடியாக அமலுக்கு வருவதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
