LATEST NEWS
டாஸ்மாக் குடிகாரர்களுக்கு பேரதிர்ச்சி!.. இனி காலி பாட்டில் கொடுத்தாலும் ₹10 கிடைக்காதா?… அரசின் அதிரடி திட்டம்…!
தமிழ்நாட்டில் மதுபானங்கள் மீதான நடைமுறையில் மாநில அரசு புதிய மாற்றத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்களை பாதிக்கும் வகையில் ஒரு புதிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்குப் பதிலாக, மதுபானங்களுக்கு நேரடியாக புதிய வரி ஒன்றை விதிக்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள நடைமுறையின்படி, காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு மாற்று ஏற்பாடாக அந்த 10 ரூபாயை ‘செஸ்’ வரியாக மாற்றுவதற்கு வணிகவரித்துறை அரசுக்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்த புதிய கருத்துருவின் அடிப்படையில் தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறது.
இந்த புதிய செஸ் வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில், பாட்டிலுக்காகத் தனியாக வசூலிக்கப்பட்டு வந்த தொகையானது நிரந்தரமாக மதுபானத்தின் விலையோடு நேரடியாக இணைக்கப்படும். இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை உறுதியாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. அரசின் இந்த மாற்று ஏற்பாடு மதுப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
